சென்னை மெட்ரோ ரயிலில் தினம்தோறும் ஏராளமான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ஐந்து ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ கியூ ஆர்(static QR, mobile QR, Paytm, WhatsApp and phonepe) பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். மெட்ரோ ரயில் நிறுவன அட்டை, சிங்காரச் சென்னை அட்டை, ஸ்டார் வேல்யூ பாஸ் மற்றும் காகித கியூ ஆர் ஆகியவற்றுக்கு இந்த சலுகை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.