அரசு வங்கிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,402 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது.

பணியிடங்களைப் பொறுத்து பொறியியல், பட்டம், முதுகலை படித்தவர்கள் இந்தப் பணிகளுக்குத் தகுதியுடையவர்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.175 மற்றும் மற்றவர்கள் ரூ.850 தேர்வுக்கான கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் CIBIL மதிப்பெண் 650ஐ பராமரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களை அறிய இந்த இணையதள முகவரியை பார்க்கவும் https://www.ibps.in/