இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பட்டதாரிகளுக்காக 7,150 காலியிடங்களுடன் கூடிய புதிய அப்ரண்டிஸ் (பயிற்சிப் பணியாளர்) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டிற்கு மட்டுமே 396 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற, 28 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த ஓராண்டு கால பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.15,000 உதவித்தொகையாக வழங்கப்படும். ஆன்லைன் வழித் தேர்வு மற்றும் உள்ளூர் மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.300 ஆகவும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 6, 2026-க்குள் (ஆன்லைனில் ஜூன் 8 வரை) அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.
