தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 முதன்மைத் தேர்வு வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்குத் தயாராகி வரும் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதன்மைத் தேர்வின்போது கருப்பு நிறப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கிராப் மூலம் பதிவு செய்யப்படும் என்றும், பத்து தேர்வர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் என்ற விகிதத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.