டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலக்ட்ரிக் கார் Punch EV. இந்த கார் பற்றிய விபரங்களை கடந்த வாரம் இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்நிறுவனத்தின் ஜென் 2 EV ஆர்க்கிடெக்சரில் உருவாக்கப்பட்ட முதல் கார் ஆன இது எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்திய சந்தையில் இந்த மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கிவிட்ட நிலையில் வருகின்ற 17ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.