தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ,அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , கூலமேடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.

தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் குறித்து கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை பாடல்களில் குறிப்புகள் உள்ளன. முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன பெண்கள், காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட சல்லிக்காசுகளை மாடுகளின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. காளையை அடக்குவோருக்கு சல்லிக்காசு சொந்தமாகும். இதுவே சல்லிக்கட்டு ஆக மாறி, பேச்சுவழக்கில் ஜல்லிக்கட்டு என்றாகி உள்ளது.