நம் நாட்டில் கிரிக்கெட்  மீது ஒரு பெரிய மோகம் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கிரிக்கெட் விளையாட்டிற்கு ரசிகர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இந்த போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாததற்கு சில காரணங்கள் உள்ளன. ஒரு விளையாட்டு ஒலிம்பிக்கில் நுழைவதற்கு, அது குறைந்தது நான்கு கண்டங்கள் மற்றும் 75 நாடுகளில் விளையாடப்பட வேண்டும்.

கிரிக்கெட் அவ்வளவு பிரபலம் இல்லை. ஆனால் 1900 ஆம் ஆண்டில், கிரிக்கெட்டும் ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் அது அகற்றப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஏதென்ஸ், பெய்ஜிங், லண்டன், ரியோ டி ஜெனிரோ, டோக்கியோ போன்ற நகரங்களில் கிரிக்கெட் மைதானங்கள் இல்லை.