ஷார்ஜாவில் டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் விபீஷ் என்ற இந்தியருக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் அதிர்ஷ்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 15 வருடங்களாகத் விடாமல் லாட்டரி வாங்கி வந்த விபீஷுக்கு, இந்த முறை சுமார் 10 கோடி ரூபாய் (5 மில்லியன் திர்ஹாம்) பம்பர் பரிசு அடித்துள்ளது. இந்தத் திடீர் அதிர்ஷ்டத்தால் அவர் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளார். ​நீண்ட காலமாகத் துபாயில் உழைத்து வரும் இவர், இந்த பரிசுத் தொகையைக் கொண்டு தனது வெளிநாட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பத் திட்டமிட்டுள்ளார்.

“இந்த பணத்தைக் கொண்டு மீண்டும் தாயகம் திரும்பி எனது குடும்பத்துடன் நிம்மதியாக வாழ விரும்புகிறேன்; குறிப்பாக எனது மகளின் உயர்கல்விக்காகவும், அவரது எதிர்காலத்திற்காகவும் இந்தத் தொகையைச் செலவிட உள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஒரு சாமானிய டாக்ஸி ஓட்டுநரின் வாழ்க்கை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியிருப்பது துபாயில் உள்ள இந்தியர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.