தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர் நெஞ்சங்களை பதற வைப்பதோடு மட்டுமன்றி, அந்தச் சிறுவனின் அசாத்திய துணிச்சலுக்குப் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
நீச்சல் தெரியாத ஒரு சிறுவன், கையில் காற்று நிரப்பப்பட்ட பந்து ஒன்றை வைத்துக்கொண்டு தண்ணீரில் பழகிக்கொண்டிருந்தான். அப்போது, அங்கு சறுக்கி விளையாடிக்கொண்டிருந்த அவனது அக்கா, எதிர்பாராத விதமாகத் தவறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டார்.
நீச்சல் தெரியாமல் அவர் உயிருக்குத் தத்தளிப்பதைக் கண்டு, முதலில் அந்தச் சிறுவன் அச்சமடைந்தான். உடனே அருகில் இருந்த ஏணியைப் பிடித்து அக்காவைத் தூக்க முயன்றான்; உதவிக்காகக் கூச்சலிட்டுப் பார்த்தான். ஆனால், யாரும் உதவிக்கு வராத அந்த இக்கட்டான சூழலில், அந்தச் சிறுவன் ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை.
தனக்கு நீச்சல் தெரியாது என்பதையும் மறந்து, தனது உயிரைப் பணயம் வைத்து உடனடியாகத் தண்ணீருக்குள் குதித்து, அக்காவிடம் நீந்திச் சென்று அவரை லாவகமாகப் பிடித்துக் கரை சேர்த்தான். எவ்விதப் பயிற்சியும் இல்லாத சூழலில், ஒரு சிறுவன் காட்டிய அந்த அபார தைரியம் தற்போது பலராலும் வியந்து பேசப்படுகிறது.
Fear disappeared the moment his sister needed him. pic.twitter.com/Wxd1SnB5VG
— CCTV X (@cctv_videos) March 7, 2026
“>
“எந்த ஒரு சாதனைக்கும் தைரியமே முதல் படி; பயந்துகொண்டே இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியாது” என்ற கருத்தோடு இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. ஆபத்தான நேரத்தில் அறிவை விட அந்தச் சிறுவன் காட்டிய துணிச்சலான பாய்ச்சல், அனுபவமே சிறந்த ஆசான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அந்தச் சிறுவனின் வீரச் செயலுக்கு இணையவாசிகள் தங்களது வாழ்த்துக்களை மழையெனப் பொழிந்து வருகின்றனர்.
