
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்க்க வினோதமாகவும் இப்படி கூட செய்ய முடியுமா என்று தோன்றும் விதத்திலும் இருக்கும். அப்படித்தான் ஒருவர் திகைத்து போய் வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது ஒருவர் தர்மபுரி வழியாக சென்றபோது அங்கிருந்த சாலையில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒவ்வொரு வாலிபர்களுக்கு அருகிலும் ஒரு ஹீரோயினின் போட்டோ இருந்தது. அதன்படி சமந்தா, மீனாட்சி சவுத்ரி, சாய் பல்லவி, கல்யாணி பிரியதர்ஷினி, கீர்த்தி செட்டி, அனுபாமா பரமேஸ்வரன், ஹிந்தி நடிகை கியாரா அத்வானி, கயல் ஆனந்தி ஆகியோரின் போட்டோக்கள் உள்ளது. இந்த பேனரை பார்த்த ஒருவர் மிகவும் வியப்பூட்டும் விதமாக பேசி ஆச்சரியமாக அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த பேனரில் ஜோடி எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க பங்காளி என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.