இந்திய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மோசமான சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் சர்வதேச டி20 போட்டிகளில் மோசமான சாதனை படைத்துள்ளார். ருதுராஜ் டி20 போட்டிகளில் டைமண்ட் டக் அவுட் ஆகிய மூன்றாவது இந்திய வீரர் ஆனார். விசாகப்பட்டினம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய முதல் டி20 போட்டியில் டைமண்ட் டக் ஆக வெளியேறிய ருத்ராஜ், இந்த மோசமான சாதனையை தனது பெயரில் படைத்துள்ளார். நேற்று ஸ்டோய்னிஸ் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ஜெய்ஸ்வால் அடித்து விட்டு 2 ரன் ஓடும்போது ரன் அவுட் ஆனார்.

ஜெய்ஸ்வால் இரண்டாவது ரன்னுக்கு அழைத்து விட்டு வேண்டாம் என சொல்ல துரதிர்ஷ்டவசமாக டைமண்ட் டக் அவுட் ஆனார். டைமண்ட் டக் என்பது ஒரு பந்தையும் சந்திக்காமல் அவுட் ஆவது ஆகும். ஜெய்ஸ்வால் செய்த சிறிய தவறால் மோசமான சாதனையை படைத்துள்ளார். இருப்பினும் கிரிக்கெட்டில் இப்படி ரன் அவுட் ஆவது இயல்பான ஓன்று தான்.

இந்திய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே கெய்க்வாட் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட் ஆனார். கெய்க்வாட் டுக்கு முன், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் மோசமான சாதனை பட்டியலில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த சாதனையை படைத்த 21வது இந்திய வீரர் என்ற பெருமையை கெய்க்வாட் பெற்றார்.

டி20 போட்டிகளில் டயமண்ட் டக் ஆன இந்திய வீரர்கள் :

ஜஸ்பிரித் பும்ரா v இலங்கை (2016)

அமித் மிஸ்ரா v இங்கிலாந்து (2017)

ருதுராஜ் கெய்க்வாட் v ஆஸ்திரேலியா (2023)*

இந்திய அணி வெற்றி :

டாஸ் வென்ற இந்திய அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச முடிவு செய்தார். ஆஸ்திரேலியா 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. ஆஸி., அணியில் ஜோஷ் இங்கிலிஷ் அதிரடியாக  50 பந்துகளில் 110 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்களும் எடுத்தனர்.. பின் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்கள் எடுத்தார். அபோட்டின் கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட ரிங்கு சிங் சிக்ஸ் அடித்தார். ஆனால் அது நோ பால் என்பதால் இந்திய அணி வெற்றிபெற்றது. சிக்ஸ் கணக்கிடப்படவில்லை. ரிங்கு சிங் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.

https://twitter.com/SAJID83747470/status/1727712178608951348