ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் எடப்பாடி தரப்பில் போட்டியிடும் கே.எஸ் தென்னரசுவுக்கு ஆதரவாக நேற்று எடப்பாடி பழனிச்சாமி வாகன பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைப்பதாக குற்றம் சாட்டினார். அதன் பிறகு மீசை வச்ச ஆம்பளையா இருந்தா வாக்காளர்களை வெளியே விட்டு விட்டு தேர்தலை எதிர்கொள் என்று கூறினார். அதோடு அதிமுகவை நேரடியாக எதிர்க்க திமுகவுக்கு தைரியம் இல்லை.

அதிமுக ஆட்சி தான் பொற்கால ஆட்சியாக இருந்தது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் நவீன் எடப்பாடி பழனிச்சாமி பேசிய வீடியோவை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆம்பளையா இருக்குறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்பு பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளையா?. நீங்கள் தவழ்ந்து சென்று கால் பிடித்த சசிகலா ஆம்பளையா? இன்னும் எத்தனை காலம் stereo type வசனம் பேசுவீங்க. மேலும் இது பெண்களை இழிவுபடுத்தும் செயல் என்று பதிவிட்டுள்ளார்.