இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் முடிவடைய இருக்கிறது. ஜூலை மாத தொடக்கத்தில் உங்களுடன் தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் மாற வாய்ப்பு உள்ளது. அதன்படி, எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றுகிறது. வணிக சிலிண்டர்களின் விலையானது ஏப்ரல், மே மற்றும் ஜூன் முதல் தேதியில் குறைக்கப்பட்டது. எனினும் கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. இந்த முறை வணிகரீதியாக 14 கிலோ LPG சிலிண்டரின் விலையும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின் வரும் ஜூலை 1 முதல் வெளிநாட்டிலுள்ள கிரெடிட் கார்டு செலவுகளுக்கு TCS கட்டணத்தை விதிக்கும் ஏற்பாடாக இருக்கலாம். இதன்கீழ் உங்களது செலவு 7 லட்சம் (அ) அதற்கு மேல் இருந்தால் நீங்கள் 20% டிசிஎஸ் செலுத்தவேண்டும். அதோடு டெல்லி, மும்பை உள்ளிட்ட பிற நகரங்களில் எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் வாரத்திலேயே சிஎன்ஜி-பிஎன்ஜி விகிதத்தை மாற்றுகிறது. இது போன்ற நிலையில் ஜூலை மாதத்தில் விலையில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தங்கத்தின் ஹால்மார்க் குறித்த புதிய விதிகள் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.