ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு அவ்வப்போது அதிரடியான சலுகைகளை வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில் தற்போது சுதந்திர தினத்தையொட்டி, ஒரு சூப்பரான செய்தியை அறிவித்துள்ளது. சுதந்திர தினச் சலுகையின் கீழ் 2999 ரூபாய்க்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடேட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 மெசேஜ் 365 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

அத்துடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற சேவைகளையும் இலவசமாக பயன்படுத்தலாம். இது தவிர ரூ. 5,800 மதிப்புள்ள Swiggy, AJIO, Yatra மற்றும் Reliance Digital ஆகிய தளங்களில் பொருட்கள் வாங்குவதற்கு இலவச கூப்பன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.