ஜிம்பாப்வேயில் உள்ள புகழ்பெற்ற கரிபா ஏரியில் 114 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று திடீரென நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் திடீர் விபத்து சம்பவம் ஜிம்பாப்வே நாட்டில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக ஏரியில் வழக்கத்திற்கு மாறாகச் சீறிப்பாய்ந்த ராட்சச அலைகள் படகின் மீது பலமாக மோதியதால், நிலைதடுமாறி படகு நீரில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படகு கவிழ்ந்ததும் அதிலிருந்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி அலறியடித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, நீரில் தளித்தவர்களில் இதுவரை 77 பேரை மட்டுமே பத்திரமாக மீட்டுள்ளனர். எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் ஏரிப் பகுதியில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Watch 😢
Breaking news Zimbabwe
Boat capsizes in Lake Kariba. Over 90 people on board. Reports say over a dozen bodies retrieved, almost 40 still missing, others have been rescued
Guys we need to ban these types of boats in Zimbabwe. Zero life jackets eish pic.twitter.com/HLz6DElvdU
— Hulu (@Pachisolife) August 12, 2026
நீரில் மூழ்கிய பலரின் நிலைமை என்னவென்று தெரியாததால், இந்த கொடூர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை உருவாக்கியுள்ளது.
