பிக் பாஸ் புகழ் ஜூலி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் விஜய் ஆதரவாளர்களுக்கும் ஜூலிக்கும் இடையே கடும் போர் மூண்டுள்ளது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட ஜூலியின் கருத்துக்களுக்கு, அந்தப் போராட்டத்தை முன்னின்று ஒருங்கிணைத்த சமூக ஆர்வலர் ஒருவர் நெத்தியடிப் பதிலை அளித்துள்ளார். “ஜூலி என்பவர் மக்களுக்காகக் களத்தில் நின்று போராடியவரோ, சிறை சென்றவரோ அல்லது வழக்குச்சந்தித்தவரோ கிடையாது. ஒரு மூலையில் நின்று கோஷம் போட்டுவிட்டு, அதன் மூலம் கிடைத்த புகழை வைத்துக்கொண்டு இப்போது ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையே தனக்குச் சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது” என்று அவர் சாடியுள்ளார்.
ஜூலி action Wait for final reaction #TVKVijay #TVKForTN #Trishapic.twitter.com/RiMMGqyPrQ
— anushiya (@anushiyaxx) March 7, 2026
“>
ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிந்த பிறகு அதுகுறித்த விசாரணைகளையும், ஏராளமான வழக்குகளையும் தான் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அந்த ஆர்வலர், ஜூலி பேசுவது முற்றிலும் ‘பைத்தியக்காரத்தனமானது’ என்று விமர்சித்துள்ளார். எந்தவிதமான தியாகமும் செய்யாமல், மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு இஷ்டத்திற்குப் புகழாரம் தேடிக்கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஜூலியின் முரண்பட்ட பழைய வீடியோக்களையும், தற்போது அவர் பேசி வரும் கருத்துகளையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவைப் வைரலாக்கி வருகின்றனர்.
