ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷிகெரு இஷிபா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது லிபரல் டெமாக்ரிடேவ் கட்சிக்குள் தற்போது உட்கட்சி மோதல்கள் நிலவுகிறது.
இதனால் கட்சி உடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் விரைவில் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பின்போது இவர் தலைமையிலான அணி பெரும்பான்மையை இழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஜப்பான் பிரதமர் ராஜினாமா செய்வது அந்த நாட்டு அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
