சென்னையில் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி சென்னை சங்கமம் பிரம்மாண்ட கலை விழாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சென்னையை தொடர்ந்து வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலியில் சங்கமும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.