பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே ஜனவரி 4ஆம் தேதி முதல் வியாழக்கிழமை தோறும் சிறப்பு வந்தே பாரத் திரையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜனவரி 4 முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் காலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். வரும் மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்ட இரவு 11.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.