தமிழகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் சர்வ கட்டமைப்பு மற்றும் மென்பொருளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாற்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜனவரி 1ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதன் பிறகு ஜனவரி இரண்டாம் தேதி முதல் எந்த தடையும் இல்லாமல் கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கான பணிகள் அனைத்தும் கணினி மூலமாக நடைபெறும். இந்த நிலையில் கணினி சர்வர் மற்றும் மென்பொருள் புதுப்பிக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கான வாழ்நாள் சான்றிதழை அளிக்க முற்படலாம்.

அப்போது கணினி இணைப்பு கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த காலகட்டத்தில் கருவூல அலுவலகங்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் அளிக்க ஓய்வூதியதாரர்கள் வந்தால் அவர்கள் குறித்த விவரங்களை தனி பதிவேட்டில் குறிப்பிட வேண்டும் எனவும் ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து கணினி பயன்பாடு இயல்பாக தொடங்கிய பின்னர் அந்த பதிவேட்டில் இருந்த விவரங்களை விடுபடாமல் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.