தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026-2029 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல் இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இதில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், சர்ச்சைக்குள்ளான ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்தார்.

அந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், நீதிபதியின் முடிவுகளைக் கேள்வி கேட்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், தயாரிப்பு நிறுவனம் முன்னதாகவே சங்கத்தை அணுகியிருந்தால் சுமூக தீர்வு காணப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

மேலும், தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகள் குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய விஷால், “கோடிக்கணக்கான மக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதை ஒரு சிறிய குழு தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை; இருப்பினும் சட்ட விதிகளுக்கு நாம் கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“>

 

ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இத்தேர்தலில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு வாக்களித்தனர்.