சீனாவின் தெற்கு மாகாணங்களை தாக்கிய தாய்பூன் விப்பா (Typhoon Wipha), புயல் ஜூலை 20ம் தேதி கடும் மழையுடன் கரையை கடந்தது. புயலால் மிகுந்த சேதம் ஏற்பட்டு சுமார் 6.7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களில், மக்கள் கடும் காற்றினால் நடக்க முடியாமல் தவிக்கும் காட்சிகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. சிறுவர்கள், குடும்பத்தினருடன் வீதிகளில் விழும் காட்சிகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
ஹாங்காங்கில் மட்டும் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இது மட்டும் அல்லாமல், 80,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். காத்தே பசிபிக் விமான நிறுவனம் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியது. கடல் அலைகள் மிகுந்ததால் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, பொதுப் போக்குவரத்து சேவைகள் பல இடங்களில் முடங்கின. புயலால் 471 மரங்கள் விழுந்ததும், 26 பேர் காயமடைந்ததும், நிலவரத்தைக் கடுமையாக்கியுள்ளது.
Typhoon Wipha disrupted travel and daily life across Hong Kong and southern China today, grounding over 400 flights and affecting around 80,000 passengers in Hong Kong alone.
Hundreds more flights were delayed in nearby cities. High winds toppled trees, injuring 26 people, and… pic.twitter.com/79U0q0vgiy
— Volcaholic 🌋 (@volcaholic1) July 20, 2025
விபத்திற்கான எதிரொலியாக, 250க்கும் மேற்பட்டோர் தற்காலிக தங்குமையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். கட்டிடங்கள் இடிந்ததால் பல இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முந்தைய மங்குட் மற்றும் ஹாடோ புயல்களை விட விப்பாவின் தாக்கம் குறைவாக இருந்தாலும், மக்கள் வாழ்க்கையை பாதித்த நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதிகாரிகள் மற்றும் மீட்புப் படைகள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
🌪Typhoon Wipha hit Hong Kong with T10 warning, causing 400+ flight cancellations, fallen trees, and flooding.
It made landfall in Guangdong, China, weakening to a tropical storm. Heavy rain continues, affecting Philippines, Taiwan, and Vietnam. pic.twitter.com/Bemb7Yk9C0
— News.Az (@news_az) July 21, 2025
மேலும் இது பேயா இல்லை புயல் மேகமா என்று கேட்கும் அளவிற்கு அந்த புயல் சீனாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Timelapse: Massive dark clouds rolling over Southern #China‘s #Zhuhai as #TyphoonWipha makes landfall pic.twitter.com/LNXgoLa6Ko
— ShanghaiEye🚀official (@ShanghaiEye) July 21, 2025
