கேரளாவில் கே.ஜி ஜெயன் மற்றும் விஜயன் ஆகியோர் புகழ்பெற்ற இரட்டை சகோதரர்கள். இவர்கள் ஜெயவிஜய் என்ற அடையாளத்தோடு சினிமாவில் மிகவும் பிரபலமாக விளங்கி வந்தனர். இதில் விஜயன் கடந்த 1986-ம் ஆண்டு காலமானார்.

இந்நிலையில் கே.ஜி ஜெயனுக்கு 90 வயது ஆகும் நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயக்கியுள்ளார். இவருடைய மகன் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் மனோஜ் கே. ஜெயன். மேலும் கே.ஜி ஜெயனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.