உத்தர பிரதேஷ் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த் ராய் என்பவர் தனது 10 வயது மகளை தலைகீழாக தொங்கவிட்டு கடுமையாக தாக்கியுள்ளார். தனது பேச்சைக் கேட்காத குற்றத்திற்காக தான் அவர் அந்த 10 வயது சிறுமியை இவ்வாறு கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய செய்தது.

இதற்கு பலரும் அந்த தந்தைக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் கோவிந்த் ராயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விசாரணைக்காக சிறையில் அடைத்துள்ளனர்.