மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு துர்க்கை அம்மன் கோயிலில் நேற்று நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து கொண்டிருக்கும் போது, பக்தர்களுள் ஒருவர் திடீரென கத்தியை எடுத்து, தன் கழுத்தை அறுத்துக் கொண்டார். இதைப் பார்த்து அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர் மற்றும் அலறியபடி ஓடிச் சென்றனர். இந்த கொடூர சம்பவத்தைக் கண்ட சிலர் உடனடியாக அவரை காப்பாற்ற முயற்சித்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த நபர் ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டார், அவர் 9 நாட்கள் விரதம் இருந்து, தன் தலை காணிக்கையை அம்மனுக்கு செலுத்த முயன்றதாக கூறப்படுகிறது. அவரது கழுத்து பெரும் சேதமடைந்த நிலையில், மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை அளித்து வருகின்றனர்.