தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. இந்நிலையில் இவர் சமீபத்தில் ‘taapseeclub.com’ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார். சமூக ஊடக தளம் முழுவதும் வெறுப்பால் நிரம்பியிருப்பதாகவும், தனது உண்மையான ரசிகர்கள் யார் என்பதை அறிய முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் டாப்ஸி குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்காகவே இந்த இணையதளத்தை தொடங்கினேன் என்றும் கூறியுள்ளார்.  இந்த இணையதளத்தில் தனது தனிப்பட்ட விஷயங்கள், திரைப்பட அறிவிப்புகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்வதாக டாப்ஸி தெரிவித்தார்.