தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்து கொள்வதற்காக ஆயிரம் இலவச பாஸ்கள் வழங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

நாளை மதியம் ஒரு மணிக்கு http://jailer.sunpictures.in/என்ற இணையதளம் மூலமாக பாஸ்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 28ஆம் தேதி சென்னையில் இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தது.