பெலாரஸ் (Belarus) நாட்டைச் சேர்ந்த விகா (Vika) என்ற பெண்ணுக்கும், இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த நிகில் (Nikhil) என்ற இளைஞருக்கும் இடையே ‘கோடிங்’ (Coding) தளம் ஒன்றின் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நிகில் கொஞ்சம் கடுகடுப்பானவர், இறுக்கமானவர் என்று விகா நினைத்தாலும், பழகப் பழக அவரது அன்பான மற்றும் அக்கறையான குணத்தைப் புரிந்துகொண்டுள்ளார்.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நிகில் விகாவை மிகவும் அன்போடு அரவணைத்துக் கொள்ள, விகாவும் நிகிலுக்கு ஒரு தூணாக இருந்து அவரது எல்லா முயற்சிகளுக்கும் பக்கபலமாக நின்று ஆதரவளித்துள்ளார். இருவரும் இணைந்து தங்களது எதிர்காலத்திற்காகப் பணத்தைச் சேமித்து வந்த நிலையில், விகா முதன்முதலாக இந்தியாவிற்குப் பயணம் செய்து நிகிலை நேரில் சந்தித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நிகிலும் பெலாரஸ் நாட்டிற்குச் சென்று விகாவின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இவர்களது உண்மையான தூய்மையான காதல் தற்பொழுது திருமண பந்தத்தில் இணையவுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. “இந்திய ஆண்கள் தங்களுக்குத் தகுதியான உண்மையான அன்பையும் மரியாதையையும் பெறுவதைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது; நமது கலாச்சாரத்தையும், நம் நாட்டு ஆண்களையும் மனதார நேசிக்கும் இப்படிப்பட்ட பெண்கள்தான் உண்மையான துணையாக அமைய முடியும்” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பகிர்ந்து இந்த ஜோடியைக் கொண்டாடி வருகின்றனர்.