உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தில் நடப்பது போன்ற ஒரு பிரம்மாண்ட காதல் ப்ரோபோசலை, தங்களது பாணியில் ரீ-கிரியேட் செய்ய ஆசைப்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, அங்குள்ள ஒரு ராட்சத உயர்மின்னழுத்த மின்சார டவர் மீது ஏறிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சோஷியல் மீடியா லைக்குகளுக்காக, கொஞ்சமும் யோசிக்காமல் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் இருவரும் டவரின் உச்சிக்கு ஏறியுள்ளனர்.
அந்த ஆபத்தான இடத்தில் விறுவிறுப்பாக ப்ரோபோஸ் செய்யத் தயாரான வேளையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு அலறியடித்து ஓடிவந்த போலீஸார், அதிர்ஷ்டவசமாக அவர்களைப் பத்திரமாக மீட்டு, ஒரு பெரும் உயிர்ச் சேதத்தைத் தடுத்து நிறுத்தினர். இந்த விபரீத காதல் ப்ரோபோசல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
<script async src=”//www.instagram.com/embed.js”></script>
பலரும் இதனை ஒரு “கிராண்ட் ரொமான்டிக் கெஸ்டர்” என்று ஜாலியாக வர்ணித்தாலும், பெரும்பாலானோர் சமூக வலைத்தள மோகத்திற்காக இப்படி உயிருக்கே ஆபத்தான ஸ்டண்ட்களைச் செய்வதைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். நினைத்துப் பார்க்க வேண்டிய அழகான காதல் தருணங்கள் எல்லாமே உயிருடன் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உணராமல், இப்படி பொறுப்பற்ற முறையில் ஆபத்தை விலை கொடுத்து வாங்கிய இந்த ஜோடியின் வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் செம ட்ரெண்டாகி வருகிறது.
