இன்ஸ்டாகிராமில் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி, சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ரயில் நிலையம் ஒன்றில் ரயிலை விட்டு அவசரமாக இறங்கிய பெண் ஒருவர், தன் குழந்தையை தவறுதலாக ரயிலுக்குள்ளேயே விட்டுவிட்டார். ரயில் நகரத் தொடங்கியதும் பதறிப்போன அந்த தாய், “என் புள்ள உள்ள இருக்கே” என்று கதறியபடி ரயிலை நோக்கி ஓடிய காட்சி பார்ப்போரைக் கண் கலங்க வைத்தது.

<script async src=”//www.instagram.com/embed.js”></script>

​அந்த சமயத்தில், ரயிலில் இருந்த பயணி ஒருவர் தாயின் கதறல் சத்தத்தைக் கேட்டு, சற்றும் யோசிக்காமல் தன் பயணத்தையும் பொருட்படுத்தாமல் குழந்தையுடன் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தார். பத்திரமாக குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, வேகம் எடுத்த ரயிலை நோக்கி ஓடிச் சென்று ஆசுவாசமாக மீண்டும் ஏறிக்கொண்டார். தன் உயிரைப் பணயம் வைத்து மனிதநேயத்தோடு செயல்பட்ட இந்த ‘ரியல் ஹீரோவுக்கு’ நெட்டிசன்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.