ஐபிஎல் டி20- சேப்பாக்கத்தில் வருகிற 12-ந்தேதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது..

ஐபிஎல் தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கியது. 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.கடந்த 3ம் தேதி லக்னோவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுமார் 35 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை கண்டுகளித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் அடுத்த லீக் ஆட்டம் (இரவு 7.30 மணி) சென்னையில் 12ம் தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள 2 கவுண்டர்களில் ரூ.1,500க்கான டிக்கெட்டுகள் (சி, டி, இ கீழ் தளம்) விற்கப்படுகின்றன.ரூ.3,000 (டி, இ மேல் தளம்) விலையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்படும். ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகளுக்கு மேல் வழங்கப்படாது. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.