திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்தியாகரை பகுதியில் விவசாயியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் சமையல் கலை படித்து முடித்துவிட்டு பெற்றோருடன் விவசாய வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் பிரபு நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் பிரபுவை கண்டித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபு நேற்று முன்தினம் தனது படுக்கையறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பிரபுவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.