உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில், ஒரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கி, பொதுவெளியில் அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 29ஆம் தேதி மாலை 3 மணியளவில், சதர் கோட்வாலி எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், தியோரியா நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, சக்ரா பர் மற்றும் கோபராய் கிராமங்களைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிர்ச்சி தரும் காணொலியில், தாக்குதல் நடத்தியவர்கள் அந்த இளைஞரை பெல்ட்டால் கண்மூடித்தனமாகத் தாக்கி, மோசமான வார்த்தைகளால் திட்டுவது பதிவாகியுள்ளது. மேலும், மனிதத்தன்மையற்ற முறையில், அவர்கள் ஒரு செருப்பில் எச்சிலைத் துப்பச் செய்து, தரையில் விழுந்த அதை நக்குமாறு இளைஞரைக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
वीडीओ यूपी के देवरिया का है जहाँ जाति विशेष के सामंतियों ने PDA समाज के युवक को चप्पल पे थूक के चटवाया है ।
आप नहीं लगता पिछले 8 सालों से यूपी में सामंतियों का बोलबाला है ?? pic.twitter.com/U5Y61kJafj
— GAURAV🇮🇳 (@GK010200) December 1, 2025
“>
தன்னை விடுவிக்குமாறு பாதிக்கப்பட்ட இளைஞர் தொடர்ந்து மன்றாடிய போதும், அவர்கள் தங்கள் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவருக்கும் பாதிக்கப்பட்ட இளைஞருக்கும் இடையே நவம்பர் 20ஆம் தேதி ஏற்பட்ட தகராறே இந்தக் கொடூரச் சம்பவத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மறுநாள், குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு தோட்டத்தில் அந்த இளைஞரை வழிமறித்துத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார். தாக்குதலுடன் நிற்காமல், அதே கும்பல் அன்றிரவு இளைஞரின் வீட்டிற்கு வந்து கதவைத் உடைக்க முயற்சித்ததுடன், கற்களை வீசி அச்சுறுத்தியதாகவும், பாதிக்கப்பட்டவரின் தாயார் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இந்தக் காணொலி வைரலானதைத் தொடர்ந்து, காவல் நிலைய அதிகாரி வினோத் குமார் சிங் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றக் குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.
<a href=”http://
वीडीओ यूपी के देवरिया का है जहाँ जाति विशेष के सामंतियों ने PDA समाज के युवक को चप्पल पे थूक के चटवाया है ।
आप नहीं लगता पिछले 8 सालों से यूपी में सामंतियों का बोलबाला है ?? pic.twitter.com/U5Y61kJafj
— GAURAV🇮🇳 (@GK010200) December 1, 2025
“>
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
