மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகே தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று செல்லப்பட்டு வருகிறது. இந்த டிராவல்ஸில் பயணிகள் ஆன்லைன் மூலமாக அல்லது நேரில் சென்று புக் செய்து பஸ்சில் பயணம் செய்கின்றனர். இதனையடுத்து எமர்ஜென்சிக்காக பயணிகள் சிலபேர் பஸ் ஓட்டுனரை அணுகி சீட்டை புக் செய்கின்றனர். இதுபோன்று புக் செய்பவர்களை சில தனியார் பஸ் ஓட்டுநர் ஏமாற்றி அவர்களிடமிருந்து அதிக பணத்தை பெறுகின்றனர்.

இதுபோன்று தனியார் பேருந்து ஓட்டுனர் ஒருவர் செய்துள்ளார். இவரை சக ஊழியர்கள் ஒருவர் ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலானது. இதைப் பார்த்த மனித உரிமை ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததுடன் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்மந்தப்பட்டவர்களிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.