தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் நடிகை திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், அர்ஜுன், சஞ்சய்தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் மற்றும் சாண்டி மாஸ்டர் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் பிறகு தமிழகத்தை போன்று கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

இந்நிலையில் கண்ணூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தற்போது 5 தியேட்டர்களில் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதை ஒரு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். மேலும் படம் ரிலீஸ் ஆக இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போதே லியோ படத்தின் முன்பதிவை தொடங்கியது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.