பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் பிரம்மாண்ட வரலாற்று காப்பியத்தை படமாக எடுத்திருந்தார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி உலக அளவில் 500 கோடி வரை வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஜெயம் ரவியின் காதல் காட்சிகள் இடம்பெறும் என்பதால் முதல் காதல் பாடலை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி பிப்ரவரி 14-ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் ரிலீசாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.