தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கிய கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பல வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இயக்குனர் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி ஆகியோரும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.

அதன் பிறகு சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்தில் பகத் பாஸில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் கேமியோ ரோலிங் நடிக்க இருப்பதாக புது தகவல் வெளிவந்துள்ளது. அதோடு கைதி படத்தில் இடம்பெற்ற டில்லி மற்றும் விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கதாபாத்திரங்களும் தளபதி 67 திரைப்படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 67 படத்தில் சீயான் விக்ரம் இணைந்துள்ளதாக புது தகவல் வெளிவந்துள்ளது. முதலில் விக்ரம் படத்தில் சீயான் விக்ரம் தான் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார்.

ஆனால் சில காரணங்களால் விக்ரமால் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு தான் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போனதால் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விக்ரம் இணைந்துள்ளதாகவும் இந்த படத்திற்காக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சீயான் விக்ரம் 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்றால் தளபதி 67 திரைப்படத்தில் அவர்தான் மெயின் வில்லனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.