புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறை காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் சென்னை குடிநீர் ஆதார ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் பாதுகாப்பு கருதி 8000 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் நள்ளிரவில் பத்தாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

அதனைப் போலவே பூண்டு ஏறிக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் அது அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியவில்லை. கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் யாரும் ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது