குடிநீர் வாரியத்தின் மூலமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும் பராமரிப்பு பணிகள் அல்லது முக்கிய காரணங்களால் மட்டுமே குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுவது வழக்கம்.  இந்த நிலையில் சென்னை நெய்வேலி பகுதியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தியாக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமாக பிரதான குடிநீர் உந்து குழாய் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் மார்ச் 15ஆம் தேதி அன்று மதியம் 2 மணி முதல் 16ஆம் தேதி அன்று காலை முதல் 2 மணி வரை தாம்பரம்,  அடையாறு, பெருங்குடி , ஆலந்தூர் ,வளசரவாக்கம் பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது .இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர் முன்னரே சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது . மேலும் அவசர தேவைக்கு http://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து குடிநீர் பெற்றுக்கொள்ள முடியும்.