இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டபுள் டக்கர் என்று அழைக்கப்படும் இரண்டடுக்கு பேருந்து சேவை இருந்தது . இந்த பேருந்து சேவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதிகபட்சமாக இந்த பேருந்துகளில் 50 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும். இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணிக்கலாம்.

சென்னையில் தற்போது போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த டபுள் டக்கர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எனவே விரைவில் சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.