சென்னை டூ பெங்களூரு 8 வழிச்சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது  அவர் கூறியதாவது, இந்த சாலை ஆந்திரா மாநிலம் வழியே தமிழகத்தை இணைக்கிறது. சென்னை டூ பெங்களூருக்கு சாலை மார்க்கமாக 300 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் இந்த சாலை மூலமாக அது 200 கிலோ மீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் 2 மணி நேரத்தில் சாலை மார்க்கமாக பெங்களூருக்கு பயணிக்கலாம் என்று அவர் கூறினார். அதுமட்டுமின்றி இச்சாலை அமைக்கும் பாதையில் அடர்ந்த காடுகள் இருப்பின், அதனை தவிர்த்துவிட்டு மாற்று வழியில் சாலை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.