சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை மற்றும் கொல்லம் இடையே ஜனவரி 16ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை மகர விளக்கு பூஜையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும்.

கொல்லத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 9:00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். பின்னர் மறு மார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்புரையில் மறுநாள் மாலை 5 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரயிலில் 8 குளிர்சாதன பெட்டிகள், 5 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் இரண்டு பொதுப் பெட்டிகள் உள்ளது.