
சென்னையில் புயல் காரணமாக இரண்டு நாட்களாக இடைவிடாது கனமழை பெய்ததால் பல இடங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் பலரும் தவித்து வரும் நிலையில் அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்ட நிலையில் இன்று 9 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
எட்டு சுரங்க பாதைகளில் தேங்கி இருந்த மழை நீர் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அதன்படி வியாசர்பாடி, கணேசபுரம், துரைசாமி மற்றும் வில்லிவாக்கம் உட்பட ஒன்பது சுரங்கப் பாதைகளில் மட்டும் நீர் தேங்கியுள்ளது. சென்னையில் மொத்தம் உள்ள 22 சுரங்க பாதைகளில் 13 சுரங்கப் பாதைகளில் மழை நீர் முற்றிலும் வடிந்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இதற்கு ஏற்றது போல தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.