சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. அடுக்கு மாடி பேருந்து என்றும் மக்களால் அழைக்கப்படும் இந்த இரண்டு அடுக்கு பேருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் அதிகரித்த போக்குவரத்து நெரிசலின் காரணமாக இந்த பேருந்து சேவையில் சிக்கல் ஏற்பட்டதுu. இதன் காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது இந்த பேருந்து மீண்டும் தொடங்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து நடந்த பேச்சு வார்த்தையடுத்து இன்று சென்னை அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் மின்சார டபுள் டக்கர் பேருந்து ஓட்டம் தொடங்கியுள்ளது. அப்போது நெரிசல் நிறைந்த பகுதிகளில் பேருந்து இயக்கும்போது ஏற்படும் இடர்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது தற்போது இந்த டபுள் டக்கர் பேருந்து சுற்றுலா தலங்களை இணைக்கும் விதமாக ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.