தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குடும்பத் தலைவியினுடைய விபரங்கள் அனைத்துமே பூர்த்தி செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விண்ணம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்று இல்லத்தரசின் செல்போனிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அவ்வாறு குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்படும் பட்சத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நான்கு சக்கர வாகனங்கள் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் குடும்பத் தலைவிகள் மேல்முறையீடு செய்தால் வீட்டிற்கு வந்து ஆய்வாளர்கள் கள  ஆய்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.