
தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன் மற்றும் குருவாயூர் ஆகிய ரயில்கள் நேரம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு காலை 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய சோழன் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் காலை 7.45 மணிக்கு புறப்படும். பின்னர் தாம்பரத்தை 8 புள்ளி 13 மணிக்கு அடையும் இந்த ரயில் திருச்சியில் 2.30 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு சென்றடையும்.
திருச்சிராப்பள்ளியிலிருந்து சென்னைக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் 10.15 மணிக்கு பதில் 11 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மாலை 6.15 மணிக்கு வந்தடையும். இதனைப் போலவே எழும்பூர் மற்றும் குருவாயூருக்கு இடையே இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் காலை 9 மணிக்கு பதில் 9.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நாங்குநேரி வரை உள்ள ரயில் நிலையங்களில் ஐந்து நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் அனைவரும் உரிய நேர மாற்றத்தை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி தங்களின் பயணத்தை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.