தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்தபடி பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் பாடத்திட்ட மறுசீரமைப்பு பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே மாணவர்களின் அதனை மேம்படுத்துவது தான். அதேசமயம் பாடப்பிரிவுகளுக்கு இடையே 75 சதவீதம் இணைத்தன்மை இல்லாத காரணத்தால் பணி ஆணைபெற்றும் பணியில் சேர முடியாமல் உள்ள மாணவர்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையே இடமாறுதல் கேட்கும் மாணவர்களுக்கு பயன்படும் விதமாக இந்த பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.