தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2024-25ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகையாக மொத்தம் ₹175 கோடியே 51 லட்சம் அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை, ஒரே நாளில் அனைத்து பணியாளர்களின் வங்கிக் கணக்குகளிலும் நேரடியாக வருவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது, மாநிலம் முழுவதும் உள்ள 1,05,955 போக்குவரத்து கழக பணியாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளது.தீபாவளிக்கான போனஸ் வழங்கும் நடவடிக்கையை அரசு முன்னெடுத்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
