தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்குப் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது தளபதி விஜயை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்த லோகேஷ் கனகராஜ் பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கு இணையாக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல நடிகர்கள் நடிக்க விருப்பம் தெரிவிப்பதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட லோகேஷ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதற்காக லோகேஷ் கனகராஜுக்கு சல்மான்கான் 50 கோடி வரை சம்பளம் கொடுப்பதற்கு முன் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.