சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்ற நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக தமது மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். இதற்காக ரஜினி ஏழு நாட்கள் கால் சீட் ஒதுக்கி இருக்கின்றாராம்.

மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக 25 கோடி சம்பளம் பெறுகிறார் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த படத்தை அடுத்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த நிலையில் ரஜினி உணவு உண்ணும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோ ரஜினி அவரின் மனைவி, மகள் மற்றும் அண்ணனுடன் அமர்ந்து பந்தியில் ரசித்து ரசித்து உணவு உண்ணுகின்றார். இதனை ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றார்கள்.